சென்னை மெட்ரோ ரயில் உதவி எண்கள் கோளாறு; மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
சென்னை மெட்ரோ ரயில் உதவி எண்கள் கோளாறு; மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
ADDED : பிப் 10, 2025 04:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; சென்னையில் மெட்ரோ ரயில் உதவி எண்கள் செயல்படவில்லை என்று மெட்ரோ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோ ரயில் உதவி எண்கள் தற்காலிகமாக வேலை செய்யவில்லை. கோளாறை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பயணிகள் ஏதேனும் புகார்களை தெரிவிக்க வேண்டும் என்றால் customercare@cmrl.in என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வேறு ஏதேனும் அவசர உதவி என்றால் அருகில் உள்ள நிலைய கட்டுப்பாட்டாளர்களை தொடர்பு கொண்டு பெறலாம்.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

