ADDED : செப் 10, 2024 07:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு தங்க திருவாச்சியை, பக்தர் ஒருவர் வழங்கினார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு, புவனகிரியைச் சேர்ந்த பக்தர் ஒருவர், 2.35 கோடி ரூபாய் மதிப்பில் 2.400 கிலோ தங்கம் மற்றும் 1.200 கிலோ வௌ்ளியால் ஆன சுடல் திருவாச்சியை, தீட்சதர் சுப்பிரமணியம் மூலம் கோவிலுக்கு வழங்கினார்.