கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு முதல்வர் வாழ்த்து சொல்லணும்!: தமிழிசை சவுந்திரராஜன்
கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு முதல்வர் வாழ்த்து சொல்லணும்!: தமிழிசை சவுந்திரராஜன்
ADDED : ஆக 26, 2024 04:11 AM

ஆன்மிகம் குறித்து பேசாதவர்கள், சனாதனத்தை எதிர்த்தவர்கள் எல்லாம், இன்று முருகனுக்கு மாநாடு நடத்த வேண்டி இருக்கிறது. இது தான், பா.ஜ., பெற்றுள்ள முதல் வெற்றி. ஈ.வெ.ரா., என்று கூறிக் கொண்டிருந்தவர்களை, முருகா எனக்கூற வைத்திருப்பது, தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி.
முருகன் மாநாடு துவக்க விழாவில், முதல்வர் பேசுகிற போது, இனம், மொழி, ஜாதி பாகுபாடு இல்லை என்றார். பாகுபாடு இல்லை என்றால், கிருஷ்ணர் ஜெயந்திக்கு முதல்வர் வாழ்த்து கூற வேண்டும். இதை தமிழகம் எதிர்பார்க்கிறது.
மோடி உலக அமைதிக்காக போராடுகிறார். அவருக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும். தி.மு.க., ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது.
தமிழகத்தில், 2026ல் பா.ஜ., தலைமையில் ஆட்சி அமையும். அப்போது, சட்டசபையிலும் செங்கோல் நிறுவப்படும். பிரதமர் அதை நிறுவுவார். தி.மு.க.,விடம் இருந்து தமிழகத்திற்கு விடுதலை கிடைக்க அனைவரும் உழைக்க வேண்டும்.
தமிழகத்தில், 2026ல் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, கைகள் உயர்கிறதோ இல்லையோ, இலைகள் துளிர்க்கிறதோ இல்லையோ, தாமரை மலர்ந்தே தீரும். தமிழகத்தில் பா.ஜ.,வை அரியணை ஏற்றாமல் இந்த உயிர் போகாது.
இவ்வாறு அவர் பேசினார்.

