செஸ் வீரர் குகேஷூக்கு ரூ.75 லட்சம் ஊக்கம் தொகை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
செஸ் வீரர் குகேஷூக்கு ரூ.75 லட்சம் ஊக்கம் தொகை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஏப் 28, 2024 12:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: செஸ் வீரர் குகேஷூக்கு ரூ.75 லட்சம் ஊக்கம் தொகைக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
கனடாவின் டொரன்டோவில் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் நடைபெற்றது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, குகேஷ், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா உள்ளிட்ட 8 பேர் பங்கேற்றனர். இந்த போட்டியில் தமிழக வீரர் குகேஷ் (வயது 17) சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு, கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற, 2வது வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார். இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். முதல்வர் ஸ்டாலின் குகேஷூக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 75 லட்சத்திற்கான காசோலையை வழங்கி கவுரவித்தார்.

