' பொருளாதார குற்றவாளிகள் மீதும் இனி குண்டர் சட்டம் பாயும் ' முதல்வர் அறிவிப்பு
' பொருளாதார குற்றவாளிகள் மீதும் இனி குண்டர் சட்டம் பாயும் ' முதல்வர் அறிவிப்பு
ADDED : ஜூன் 30, 2024 01:03 AM
சென்னை:காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:
l மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதுார் ஆகிய ஊர்களில் புதிய போலீஸ் நிலையம்; ஏற்காடு பகுதியில் போக்குவரத்து போலீஸ் நிலையம் புதிதாக உருவாக்கப்படும்
l பொருளாதார குற்றவாளிகளை குண்டர் சட்ட வரம்பிற்குள் கொண்டு வர, சட்ட திருத்தம் செய்யப்படும்
l வாகனங்கள் பதிவு எண்ணை பதிவு செய்யும் தானியங்கி கேமராக்கள், வாகனங்களை எண்ணி வகைப்படுத்தும் தானியங்கி கருவிகள், நெடுஞ்சாலைகளில் பொருத்தப்படும்
l அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், கலவரத்தை அடக்க பயன்படும் உபகரணங்கள் படிப்படியாக வழங்கப்படும்
l காவலர்கள் பணியின்போது இறந்தாலோ, ஊனமடைந்தாலோ வழங்கப்படும் கருணைத்தொகை உயர்த்தப்படும்
l ஊர்க்காவல் படையில் பணியாற்றுவோர் இறந்தால், தற்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 15,000 ரூபாய், 1 லட்சம் ரூபாயாகவும், காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும், 10,000 ரூபாய் 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
l மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களில் போதைப்பொருட்களை கண்டறிய, 35 மோப்ப நாய்கள் வாங்கப்படும்.
தீயணைப்பு துறை
l துாத்துக்குடி மாவட்டம் ஏரல்; கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி; திருப்பூர் மாவட்டம் மடத்துகுளம்; செங்கல்பட்டு மாவட்டம் கோவளம்; காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை; திருநெல்வேலி; சிவகங்கை மாவட்டம் புதுவயல் ஆகிய இடங்களில், புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும்
l தீயணைப்பு துறைக்கு 50 நீர் தாங்கி வண்டிகள், மூன்று நுரை தகர்வு நீர் தாங்கி ஊர்திகள், ஐந்து அவசர கால மீட்பு ஊர்திகள் வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

