UPDATED : ஆக 18, 2024 08:44 PM
ADDED : ஆக 18, 2024 08:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குனர் ராகேஷ் பால் மரணம் அடைந்தார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 19 முதல் இப்பதவியில் இருந்து வந்தார். ராகேஷ் பால் 25 வது இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குனர் ஆவார்.
இந்நிலையில் இன்று (ஆக.,18) இந்திய கடலோர காவல்படை கட்டளை மைய திறப்பு விழாவில் பங்கேற்க இருந்த நிலையில் நெஞ்சுவலி காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

