ADDED : மே 14, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ரயில் படிக்கட்டில் இருந்து நடைமேடையில் தவறி விழுந்த குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார், 30. இவர் தன் ஒன்றரை வயது குழந்தை பிரகதீஸ்வரியுடன், நேற்று முன்தினம் மும்பையில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த விரைவு ரயிலில் பயணம் செய்தார்.
அந்த ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 10வது நடைமேடைக்கு வந்தது. அப்போது, படிக்கட்டு அருகே விளையாடிய குழந்தை எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து கீழே விழுந்தது.
நடைமேடையில் விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ரவிக்குமார், அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதும், ஓடிச்சென்று குழந்தையை ரவிக்குமார் மீட்டார்.
லேசான காயத்துடன் குழந்தை உயிர் தப்பியது.

