ADDED : ஆக 31, 2024 09:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுமியை குழந்தை திருமணம் செய்த கூலித்தொழிலாளி, பெற்றோர் என மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நத்தம் கொண்டையம்பட்டி சின்னகைலாசபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி எழுவன் 25. இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்தார். 2023ல் அதே பகுதியை சேர்ந்த பள்ளி செல்லும் 15 வயது சிறுமியை எழுவனின் பெற்றோர் சின்னையா 56, விஜயா 51, திருமணம் செய்து வைத்தனர். நத்தம் போலீசார் போக்சோவில் மூவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி வேல்முருகன், மூவருக்கும்ஆயுள் தண்டனை, ரூ.2.56 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.