ADDED : ஜூன் 15, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: சென்னை - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில், எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 5:00 மணிக்கு புறப்பட்டது. அதில், முன்பதிவு பயண பெட்டியில் பயணம் செய்த கடலுார் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணிடம், அதே பெட்டியில் பயணம் செய்த கேரள மாநில வாலிபர் ஒருவர் அத்துமீறியுள்ளார். அதனை கண்டித்த இளம் பெண்ணிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவரது புகாரின் பேரில், ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கேரள வாலிபரை பிடித்து, விருத்தாசலம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

