ADDED : மார் 23, 2024 01:05 AM
சென்னை:சிட்டி யூனியன் வங்கியின், 800வது கிளை, உ.பி., மாநிலம், அயோத்தியில் துவக்கப்பட்டுள்ளது.
சிட்டி யூனியன் வங்கி, இந்தியாவின் பழமையான தனியார் துறை வங்கி. இது, நாடு முழுதும் தன் வங்கி கிளைகளை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த பணியில், முக்கிய மைல் கல்லாக, 800வது கிளையை, உ.பி., மாநிலம் அயோத்தி, நியாவன் சாலை ராம்பாத்தில் துவக்கியுள்ளது.
ஆன்மிக உறைவிடம் அயோத்தியில் நடந்த இந்த நிகழ்வில், பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய விருந்தினர்கள் மற்றும் வங்கியின் இயக்குனர்கள் பங்கேற்றனர்.
சிட்டி யூனியன் வங்கியின் தலைவர் எம். நாராயணன் வங்கி கிளையையும், தொழிலதிபர் வினய் மனுசா கிளையின் தானியங்கி சேவையையும், வங்கியின் இயக்குனர்கள், முன்னாள் தலைவர், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்.காமகோடி முன்னிலையில் துவக்கி வைத்தனர்.
தற்போது, சிட்டி யூனியன் வங்கிக்கு நாடு முழுதும், 800 கிளைகள் மற்றும், 1,675 ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள் உள்ளன.

