ADDED : மே 02, 2024 10:17 PM
பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருவதால், வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளை கவனமுடன் பராமரிக்க வேண்டிய கடமை, அவற்றை வளர்ப்பவர்களுக்கு உள்ளது. கால்நடைகளுக்கு நாள்தோறும் நான்கு முதல் ஐந்து முறை குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். கால்நடைகள் தங்குவதற்கு, 13 அடி உயரத்திற்கு குறையாமல் கொட்டகை அமைக்க வேண்டும். கூரைக்கு மேல் வைக்கோல் மற்றும் ஓலை போடுவது, வெயிலின் தாக்கத்தை குறைக்க உதவும்.
பகலில் கால்நடைகளை மரத்தடி நிழலில் கட்டி வைக்க வேண்டும். கொட்டகைக்கு சுவர் அமைக்க முடியாத இடங்களில், சணல் சாக்குகளை அல்லது விவசாய வலைகளை கட்டி வைப்பதன் வாயிலாக, வெப்பக் காற்று உள்ளே வருவதை தடுக்கலாம். கால்நடைகளை காலை 10:00 மணிக்கு முன்னரும், மாலை 5:00 மணிக்கு பின்னரும் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். பசுந்தீவனங்களை அதிகளவு கறவை மாடுகளுக்கு கொடுக்க வேண்டும்.
கறவை மாடுகளுக்கு தீவனத்துடன் தாது உப்பு கலவை மற்றும் வைட்டமின் சத்துக்களை சேர்த்து வழங்க வேண்டும். முடிந்தால் தினமும் கால்நடைகளை குளிப்பாட்டுங்கள்.
- மனோ தங்கராஜ்,
பால்வளத் துறை அமைச்சர்