sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.72 கோடியில் 700 படுக்கைகளுடன் 9 நகரங்களில் புதிய தோழி விடுதிகள் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

/

ரூ.72 கோடியில் 700 படுக்கைகளுடன் 9 நகரங்களில் புதிய தோழி விடுதிகள் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ரூ.72 கோடியில் 700 படுக்கைகளுடன் 9 நகரங்களில் புதிய தோழி விடுதிகள் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ரூ.72 கோடியில் 700 படுக்கைகளுடன் 9 நகரங்களில் புதிய தோழி விடுதிகள் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு


ADDED : மார் 09, 2025 02:23 AM

Google News

ADDED : மார் 09, 2025 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''காஞ்சிபுரம் உட்பட ஒன்பது நகரங்களில், 72 கோடி ரூபாயில், 700 படுக்கைகளுடன் கூடிய புதிய தோழி விடுதிகள் கட்டப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

உலக மகளிர் தினத்தையொட்டி, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், 100 மகளிருக்கு பிங்க் நிற ஆட்டோக்கள்; சுய உதவி குழு மகளிருக்கு, 50 மின் ஆட்டோக்கள்; தொழிலாளர் நலத்துறை சார்பில் மகளிருக்கு, 100 ஆட்டோக்கள் போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்த ஆண்டுக்கான அவ்வையார் விருது, அன்னை தெரசா மகளிர் பல்கலை முன்னாள் துணை வேந்தர் யசோதா சண்முகசுந்தரத்திற்கு வழங்கப்பட்டது.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த சவுமியாவுக்கு, பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருதும், கன்னியாகுமரி கலெக்டர் அழகு மீனா, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோருக்கு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகளும் வழங்கப்பட்டன.

தமிழகம் முழுதும், 34,073 சுய உதவி குழுக்களைச் சேர்ந்த, 4 லட்சத்து 42,949 மகளிருக்கு 3,190.10 கோடி ரூபாய் வங்கிக்கடன் வழங்கும் திட்டத்தின் துவக்கமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் செயல்படும் 3,584 சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 46,592 மகளிருக்கு, 366.26 கோடி ரூபாய் வங்கிக் கடன்களை முதல்வர் வழங்கினார்.

விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கமே ரத்த பேதம் இல்லை; பால் பேதம் இல்லை என்பது தான். அதுவே முழுமையான சமூக நீதி. திராவிட இயக்கத்துக்கு ஆதி விதையான நீதிக்கட்சி ஆட்சியில் தான், பெண்களுக்கு முதன்முதலாக ஓட்டுரிமை தரப்பட்டது.

திராவிட மாடல் ஆட்சியில், புதுமைப் பெண், விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மக்களைத் தேடி மருத்துவம், முதல்வரின் காலை உணவுத் திட்டங்களில், மகளிர் சுய உதவிக் குழுவினரை பங்கு பெறச் செய்திருக்கிறோம்.

வேலை செய்யும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு துவங்கிய, 'தோழி' விடுதிகளுக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

புதிதாக காஞ்சிபுரம், ஈரோடு, தர்மபுரி, சிவகங்கை, தேனி, கடலுார், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய நகரங்களில், 72 கோடி ரூபாயில், 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 24 மணி நேரமும் பாதுகாவலர், பயோமெட்ரிக் நுழைவு முறை, வைபை வசதி என, பல வசதிகளுடன் அமைக்கப்படும்

மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வாயிலாக, கிராம மற்றும் நகரப் பஸ்களில், சுய உதவிக் குழுவினர் தாங்கள் தயாரிக்கிற பொருட்களை, 25 கிலோ வரை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்களை பெறலாம்

கூட்டுறவு வங்கிகள் வாயிலாக பல்வேறு கடன்கள் பெற மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

கோ- -- ஆப்டெக்ஸ் பொருட்களுக்கு, மகளிருக்கு, 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி அளிக்கப்படும்

ஆவின் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படும்

இ- - சேவை மையங்களில், 10 சதவீதம் சேவை கட்டணம் குறைக்கப்படும்.

இதையெல்லாம் சிறந்த முறையில் பயன்படுத்தி, நீங்கள் வளம் பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் அமர்ந்திருந்த மேடையில், துப்பாக்கி ஏந்திய பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்★ அதிரடிப்படையைச் சேர்ந்த பெண் போலீசார் சாகச நிகழ்ச்சிகளை நடத்தினர் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கீதா ஜீவன், சேகர்பாபு, சுப்பிரமணியன், கணேசன், கயல்விழி, சென்னை மேயர் பிரியா, எம்.பி.,க்கள் தமிழச்சி, கனிமொழி சோமு, கலாநிதி, தலைமைச் செயலர் முருகானந்தம், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us