சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்
சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்
ADDED : ஜூன் 26, 2024 08:51 PM

சென்னை: இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புடன் 10 ஆண்டுகால மக்கள் தொகை கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும். என பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தில் அவர் மேலும்தெரிவித்து இருப்பதாவது: அரசியல்அமைப்பு சட்டப்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியிலில் வருகிறது. நாட்டின் வளர்ச்சி அனைத்து சமூகத்தையும் சென்றடைய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். சமூகப்பொருளாதார வளர்ச்சியை இலக்காககொண்டு கொள்கைகளை வகுக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் எப்போதும் அடிப்படையாக இருக்கும். எனவே சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்.
முன்னதாக கடந்த 20.10.2023 அன்று இது சம்பந்தமாக கடிதம் எழுதி இருந்ததையும், அப்போதும் சாதி வாரி கணக்கெடுப்பு , மக்கள் தொகைகணக்கெடுப்பையும் ஒன்றாக மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலும் இணைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

