
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழ் சினிமா காமெடி நடிகர் விஸ்வேஸ்வரராவ், 64 காலமானார்.
ஆந்திராவைச் சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, காமெடியனாகவும், குணச்சித்திர நடிகராகவும், பிதாமகன், உன்னை நினைத்து உள்ளிட்ட, 100க்கு மேற்பட்ட படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என, 300க்கும் மேற்பட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
சென்னை சிறுசேரி பகுதியில், குடும்பத்துடன் வசித்து வந்த இவர், நேற்று காலை உடல்நிலை சரியின்றி காலமானார். இரண்டு ஆண்டுகளாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார்.
இறுதிச்சடங்கு நேற்று மாலை நடந்தது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவருக்கு வரலட்சுமி என்ற மனைவியும், பார்கவி, பூஜா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

