ADDED : மார் 26, 2024 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'லொள்ளு சபா' புகழ் காமெடி நடிகர் சேஷு, 60, நேற்று காலமானார்.
சென்னை பள்ளிக்கரணையில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் காமெடி நடிகர் சேஷு. நடிகர் சந்தானத்தின் காமெடி குழுவில், 'லொள்ளு சபா' காமெடி நிகழ்ச்சி முதல் சினிமா வரை பயணித்து வந்துள்ளார். சந்தானத்துடன், ஏ1 மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி போன்ற, பல படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு கடந்த 15ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ரத்தக்குழாயில் உள்ள அடைப்பை நீக்க மருத்துவ பண உதவிக்காக காத்திருந்தார்.
வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இறுதிச்சடங்கு இன்று காலை நடக்க உள்ளது.

