ADDED : ஜூலை 02, 2024 12:41 AM
சென்னை : இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும்; வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, உள்நாட்டில் மாதத்தின் முதல் நாளன்று சமையல் காஸ் சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றன.
தமிழகத்தில் கடந்த மாதம் வீட்டு காஸ் சிலிண்டர், 818.50 ரூபாய்க்கு விற்பனையானது. இம்மாதமும் அதே விலையே நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது; மாற்றம் எதுவும் இல்லை.
இந்த விலைக்கு சிலிண்டர் வாங்கியதும், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில், மத்திய அரசின் மானிய தொகை நேரடியாக செலுத்தப் படும். கடந்த மாதம் 1,840.50 ரூபாய்க்கு விற்கப்பட்ட வணிக சிலிண்டர் விலை இம்மாதம் 31 ரூபாய் குறைந்து, 1,809.50 ரூபாயாகிஉள்ளது.