தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பொருட்கள் விலை பட்டியல் பொதுப்பணித்துறை வெளியீடு

பொருட்கள் விலை பட்டியல் பொதுப்பணித்துறை வெளியீடு

பொருட்கள் விலை பட்டியல் பொதுப்பணித்துறை வெளியீடு


ADDED : ஜூலை 14, 2024 12:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2024 12:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:அரசு துறை கட்டடங்கள் கட்டுமான பணிகளுக்காக, பொதுப்பணி துறை சார்பில், பொதுவான விலை விவர பட்டியலை, அமைச்சர் எ.வ.வேலு நேற்று வெளியிட்டார்.

அரசு துறைகளுக்கான கட்டடங்களை, அந்தந்த துறைகளே கட்டும் நிலை இருந்தது.

அதை மாற்றி, அனைத்து அரசு துறை கட்டடங்களையும், இனி பொதுப்பணி துறையே கட்டித் தரும் என, தற்போது உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில், அவற்றுக்கு மதிப்பீடு தயார் செய்வதற்காக, நடப்பாண்டுக்கான கட்டுமான பொருட்கள் விலை விபரம், கட்டுமான தொழிலாளர் தினக்கூலி விபரம் அடங்கிய, பொதுவான விலை விபர பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இப்பட்டியல் நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. முதல் முறையாக பொதுப்பணி துறை அல்லாத துறைகளுக்கு விலை விவரப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணி துறை செயலர் மங்கத்ராம் சர்மா, முதன்மை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, நிதித்துறை துணை செயலர் பிரதிக் தயாள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us