வானதி மீது நிர்மலாவிடம் புகார்! ஹோட்டல் உரிமையாளரால் கோவையில் கலகலப்பு
வானதி மீது நிர்மலாவிடம் புகார்! ஹோட்டல் உரிமையாளரால் கோவையில் கலகலப்பு
ADDED : செப் 11, 2024 10:23 PM

கோவை: நிர்மலாவிடம் வானதி மீது புகார் கூறிய ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவர் கூறிய புகாரால் கலகலப்பு நிலவியது.
கோவை கொடிசியா நடைபெற்ற தொழில் துறையினர் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
அப்போது தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவரும், அன்னபூர்ணா உரிமையாளருமான சீனிவாசன் நிர்மலாவிடம் வானதி மீது புகார் கூறியது கலகலப்பை ஏற்படுத்தியது.
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி, எங்கள் ரெகுலர் கஸ்டமர். அன்னபூர்ணாவுக்கு சாப்பிட வரும் போதெல்லாம் சண்டை போடுகிறார்.
ஜிலேபி சாப்பிட வேண்டியது. அடுத்தது காபி குடிக்கணும், காரம் வேணும் என்பார்.
ஜிலேபிக்கு கம்மி, காரத்துக்கு 12% ஜி.எஸ்.டி., என்று சொன்னால் சண்டைக்கு வர்றது, கடை நடத்த முடியல மேடம்.
ஸ்வீட், காரம் எல்லாத்துக்கும் ஒரே மாதிரி ஜிஎஸ்டி போட்டு விடுங்க
- தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவரும், அன்னபூர்ணா உரிமையாளருமான சீனிவாசன் புகாரால் கலகலப்பு நிலவியது