ADDED : ஜூலை 11, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மின் வினியோக சாதனங்களில் இருந்து, சிலர் முறைகேடாக மின்சாரத்தை திருடி பயன்படுத்துகின்றனர்.
வீடு, வணிக பிரிவில் மின் இணைப்பு பெற்றுள்ள சிலர், விதிகளை மீறி கூடுதல் தளங்களை எழுப்பி, அதற்கும் மின்சாரம் பயன்டுத்துகின்றனர்.
மின் வாரிய விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது, மின் திருட்டு கண்டுபிடிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நுகர்வோரிடம் இருந்து, இழப்பீட்டுத் தொகை அபராதமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், முறைகேடான எலக்ட்ரிக்கல் பணிக்கு உடந்தையாக உள்ள தனியார் எலக்ட்ரிஷீயன்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறு, பொறியாளர்களுக்கு, மின் வாரிய விஜிலென்ஸ் பிரிவு உத்தரவிட்டுள்ளது.

