ADDED : ஜூலை 13, 2024 12:27 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் 33 கிலோ கலப்பட டீ துாளை போலீசார் பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
விருத்தாசலத்தில் கலப்பட டீ துாள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் ராஜசேகர் மற்றும் போலீஸ்காரர் மணிகண்டன் ஆகியோர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதில், பஸ் நிலையம் அருகே உள்ள மளிகை கடையில் கலப்பட டீ துாள் விற்பனை செய்ததை கண்டுபிடித்து, 33 கிலோ டீ துாளை பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுந்தரமூர்த்தி கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட டீ துாள், தஞ்சாவூரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு, கலப்பட துாள் என உறுதி செய்யப்பட்டால், கடைக்கு 'சீல்' வைத்து அபராதம் விதிக்கப்படும்' என்றார்.

