ADDED : மே 06, 2024 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: துாத்துக்குடி தனியார் பள்ளியில் நடந்த நீட் தேர்வில் வேறு கேள்வித்தாள் வழங்கப்பட்டதால் மாணவ மாணவிகள் குழப்பமடைந்தனர்.
இந்தியா முழுவதும் மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவு தேர்வு நேற்று நடந்தது. துாத்துக்குடி அழகர் பள்ளியில் நடந்த நீட் தேர்வில் 750 க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். மற்ற இடங்களில் வழங்கப்பட்ட தேர்வு தாளுக்கும் அழகர் பள்ளியில் மட்டும் வழங்கப்பட்ட தேர்வு தாளும் வேறு மாதிரியாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் குற்றம் சாட்டினர்.
இதனால் இவர்களுக்கு எவ்வாறு விடைத்தாள் திருத்தம் செய்யப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.