ADDED : ஏப் 14, 2024 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சில நாட்களாக நீடித்த போக்குவரத்து நெரிசல் நேற்று ஒரு மணி நேரம் தணிந்தது.
விடுமுறை எதிரொலியாக சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வாகனங்களில் வருகை தந்தனர். இதனால் பல மணி நேர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்று காலை ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் இருந்தது. பின் நகரம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது. குளு, குளுநகரான கொடைக்கானலில் நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர்.

