மக்களை பிரித்தாள நினைக்கும் காங்.,: எச்.ராஜா குற்றச்சாட்டு
மக்களை பிரித்தாள நினைக்கும் காங்.,: எச்.ராஜா குற்றச்சாட்டு
ADDED : ஏப் 26, 2024 02:10 AM
சிவகங்கை:''லோக்சபா தேர்தல் அறிக்கை மூலம் மக்களை காங்., பிரித்தாள நினைக்கிறது'' என பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டினார்.
சிவகங்கையில் அவர் கூறியதாவது: ராஜஸ்தான் பிரசாரத்தில் பிரதமர் மோடி தேர்தல் விதிமுறையை மீறவில்லை. அவர் முஸ்லிம் என்ற வார்த்தையை ஒரு முறை கூட பயன்படுத்தவில்லை. எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் பிரதமருக்கு எதிராக மனு அளித்தாலும் மதரீதியாக பிரதமர் பேசாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை.
மதத்தின் அடிப்படையில் சிறுபான்மையினரை இணைக்கவும், ஜாதி அடிப்படையில் ஹிந்துக்களை பிரித்து ஆட்சிக்கு வர காங்., முயற்சிக்கிறது. சிறுபான்மையினரை கவர்வதற்காவும் பெரும்பான்மையினரை வஞ்சிக்கும் விதமாக பிரித்தாளும் தனது தேர்தல் சித்து விளையாட்டை காங்., தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
20 நாட்களாக எனது அலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது. அதில் அதிகம் பேசுவது கிடையாது. டில்லியில் இருந்து ைஹதராபாத் வரை வந்த சாராய ஊழல் வழக்கு சென்னைக்கும் வரும். சாராயம் உற்பத்தி செய்யும் அனைவரும் ஜூன் 4க்கு பிறகு சிறை செல்வார்கள். மணல் குவாரி வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி ஈ.டி.,யில் ஆஜரான கலெக்டர்களுக்கு பல தகவல் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

