ADDED : ஆக 16, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சுதந்திர தின விழாவை ஒட்டி, சென்னை அண்ணா சாலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர், 100 மீட்டர் நீளமுள்ள தேசியக் கொடியுடன் அணிவகுப்பு நடத்தினர்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சேவாதள தொண்டர்களின் அணிவகுப்பை ஏற்று, தேசியக் கொடி ஏற்றி வைத்தார். சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு மரியாதை செய்யப்பட்டது.
சென்னை அண்ணா சாலை தர்கா பகுதியில் இருந்து, 100 மீட்டர் நீளமுள்ள தேசியக் கொடி அணிவகுப்பு நடந்தது. இதில், ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை உட்பட ஏராளமானோர். தேசியக்கொடி ஏந்தி பங்கேற்றனர்.

