தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க ஒரு தொகுதியில் போட்டி:பன்னீர்செல்வம்
தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க ஒரு தொகுதியில் போட்டி:பன்னீர்செல்வம்
UPDATED : மார் 21, 2024 10:23 PM
ADDED : மார் 21, 2024 09:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: நிறைய தொகுதிகள் கொடுக்க முன் வந்த போதும் இரட்டை இலை இல்லாததால் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஓ,பி.எஸ் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க ஒரு தொகுதியில் போட்டி. தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, பா.ஜ.,வில் உரிய அங்கீகாரமும் அன்பும் உள்ளது. பா.ஜ.,கூட்டணியி்ல் தான் போட்டியிடுகிறேன்.
இரட்டை இலை சின்னத்தை பெறவே போட்டி
நிறைய தொகுதிகள் கொடுக்க முன் வந்த போதும் இரட்டை இலை சின்னத்தை பெறவே தேர்தலில் களம் இறங்குகிறோம். இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியில்லை. நானே களத்தில் நின்று வென்று காட்ட முடிவு செய்துள்ளேன். இவ்வாறு பன்னீர் செல்வம் கூறினார்.

