ADDED : ஏப் 19, 2024 01:06 AM
சென்னை:நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு நிர்ணயிப்பு துணை குழுவில், மாநகராட்சி கமிஷனர்களை சேர்க்க, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு நிர்ணயிப்பதற்காக, மாநில அளவில் மைய குழுவும், மாவட்ட அளவில் துணை குழுக்களும் அமைக்கப்படுகின்றன. இதில், மாவட்ட அளவிலான குழுக்களில், நகராட்சி, பேரூராட்சிகள் சார்பில், அதிகாரிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர்.
இந்நிலையில், ஊராட்சிகள், மாநகராட்சிகள் சார்பில் பங்கேற்கும் அதிகாரிகள் குறித்து பல்வேறு குழப்பம் நிலவுகிறது. இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் மாவட்ட அளவிலான துணை குழுவில், ஊராட்சிகள் சார்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலரை உறுப்பினராக சேர்க்கலாம். அந்த மாவட்டத்தில் மாநகராட்சி இருந்தால், அதன் கமிஷனரை உறுப்பினராக சேர்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

