UPDATED : மே 17, 2024 06:15 PM
ADDED : மே 17, 2024 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்:நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே குள்ளநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல், 57. இவரது மனைவி சரஸ்வதி, 54. நேற்று காலை, 6:00 மணியளவில் தாங்கள் வளர்க்கும் யூக்கலிபட்ஸ் மரத்திலிருந்து, கொக்கியில் இலைகளை பறித்து ஆடு, மாடுகளுக்கு போடும் முயற்சியில் சரஸ்வதி ஈடுபட்டார்.
அப்போது, திடீரென கொக்கியில் மின்சாரம் தாக்கி, அலறியபடி சரஸ்வதி கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட தங்கவேல் ஓடி வந்து, அவரை காப்பாற்ற முயற்சித்தார். ஆனால் இவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததால் அவரும் கூச்சலிட்டார்.
இதையடுத்து, இருவரும் மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

