ADDED : செப் 04, 2024 08:48 PM
அருந்ததியருக்கான உள்ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். ஆனால், உள்ஒதுக்கீட்டை எதிர்ப்பதாக, சிலர் திட்டமிட்டு அவதுாறு பரப்பி வருகின்றனர். பட்டியலினத்தவரை குழுக்களாக பிரித்து, இடஒதுக்கீடு வழங்க, மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்றும், பட்டியலினத்தவர் இடஒதுக்கீட்டில் 'கிரீமிலேயர்' வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இதன் மீது சீராய்வு மனு மட்டுமே தாக்கல் செய்திருக்கிறோம்.
'உள்ஒதுக்கீடு தொடர்பான சட்டத்துக்கு திருமாவளவன் ஆதரவு தெரிவித்ததால், அச்சட்டம் நிறைவேறியது' என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியிருந்தார்.
எனவே, நாங்கள் உள்ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என்பது புலப்படுகிறது. ஆனால், ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பவர்கள் குறித்து யாரும் விமர்சிப்பதில்லை. ஆதரிக்கும் எங்களை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
திருமாவளவன்,
தலைவர், விடுதலை சிறுத்தைகள்