ADDED : ஜூலை 11, 2024 11:22 PM
சென்னை:தமிழகத்தில் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உதவும் வகையில், மத்திய அரசு உத்தரவின்படி, தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள் வாயிலாக விவசாய கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக அதிகபட்சமாக, 3 லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் பயிர்க்கடன் பெறலாம்; 2 சதவீத வட்டியில், 12 மாதங்களில் திரும்ப செலுத்தலாம். ஐந்து ஆண்டுகள் வரை இது செல்லுபடியாகும்.
தமிழகத்தில் இதுவரை, 32 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால், பல விவசாயிகள் விண்ணப்பித்தும் விவசாய கடன் அட்டை பெற முடியாத நிலை உள்ளது. இதனால், சாகுபடி நேரத்தில் உதவி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
எனவே, நடப்பாண்டு இறுதிக்குள், பயிர்க்கடன் அட்டை பெற்ற விவசாயிகள் எண்ணிக்கையை, 50 லட்சமாக உயர்த்த வேளாண் துறை திட்டமிட்டு உள்ளது.

