ADDED : ஏப் 29, 2026 06:40 PM
இடமிருந்து வலம்
1. பொய்க் கண்ணீருக்கு உதாரணம் காட்டப்படும் விலங்கு.
3. ஊழல்வாதிகள் நம் தேசத்தை ________ அரிப்பது போல் அரித்துக் கொண்டு இருக்கின்றனர்.
6. ________யூகம் என்றால் அறிவாற்றல்.
7. ________ நல்ல மனம் உண்டாம் என்று தொடங்குகிறது அவ்வையாரின் ஒரு விநாயகர் துதிப்பாடல்.
8. இதன்மூலம் நாம் பார்க்கிறோம்.
9. ‘________ கற்பினுக்கு அணியை’ என்ற அனுமனின் வாக்கியம் சிறந்த தகவல் தொடர்புக்கு எடுத்துக்காட்டு.
11. இதயம் பேசுகிறது என்ற தலைப்பில் பல பயணக் கட்டுரைகளை எழுதிய இவர் அந்தப் பெயரில் ஒரு வார இதழையும் துவக்கினார்.
12. விவாதித்தல் என்ற பொருள் கொண்ட இந்த ஆங்கில வார்த்தை வட்டெறிதல் விளையாட்டையும் நினைவுப்படுத்தும்.
14. அலட்சியப்போக்கு அல்லது இழிவுப்படுத்தும் தன்மை. மிளகாயின் தன்மையில் முடியும் சொல்.
15. சூதாட்ட விடுதிகளுக்குப் பெயர் பெற்ற அமெரிக்க நகரம்.
17. கேடி பில்லா ________ ரங்கா என்பது ஒரு நகைச்சுவைத் திரைப்படப்பெயர்.
18. கோடு போடு என்றால் அவன் ________ போட்டு விடுவான்.
மேலிருந்து கீழ்
2. ________ வந்தது தலைப்பாகையோடு போனது.
3. ஆலயங்களில் இருக்கக் கூடிய இது பெருத்த ஒலி எழுப்பும்.
4. அம்மையார் என்பதில் ஒரு கேள்விச் சொல்
5. ________ இரண்டொழிய வேறில்லை என்றார் அவ்வையார்.
6. இனவெறிக்கு எதிரான போராட்டம் காரண மாக பல வருடங்கள் சிறைபட்டவர் நெல்சன் ________.
8. தேங்காய்க்கு இது மூன்று உண்டு!
9. பசுவின் சிசு.
10. ஒப்பிட முடியாத.
11. ஓமன் நாட்டின் தலைநகர் ________கட்.
13. ________ கோவிந்தா என்று வாழ்ந்து விட்டுப் போவதை விட நம் தனித் தன்மையை வெளிப்படுத்தவேண்டும்.
14. பாலஸ்தீன நாடும் இந்த நாடும் பெரும் பகை கொண்டுள்ளன.
16. மரத்தின் அஸ்திவாரம்.
விடைகள்
இடமிருந்து வலம்
1.முதலை
3.கரையான்
6.மதி
7.வாக்குண்டாம்
8.கண்
9.கண்டேன்
11.மணியன்
12.டிஸ்கஸ்
14.இளக்காரம்
15.லாஸ்வேகாஸ்
17.கில்லாடி
18.ரோடு
மேலிருந்து கீழ்
2.தலைக்கு
3.கண்டாமணி
4.யார்
5.ஜாதி
6.மண்டேலா
8.கண்
9.கன்றுக்குட்டி
10.ஈடில்லாத
11.மஸ்
13.கும்பலோடு
14.இஸ்ரேல்
16.வேர்
