தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ குறுக்கு எழுத்து புதிர்

குறுக்கு எழுத்து புதிர்

குறுக்கு எழுத்து புதிர்


ADDED : ஏப் 30, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இடமிருந்து வலம்

1. இழந்த ஒன்றை எண்ணும் போது ஏற்படக் கூடிய உணர்வு.

4. உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முகம்மது _________.

5. மண்ணைப் பிளக்க உதவும் தோட்டக் கருவி.

6. தாய்_________ பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்கிறது!

7. _________ செய்யப்படுவோம் என்று தெரிந்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

8. தக்கார் இறுதியில் போக்குவரத்து வாகனம்.

9. _________ போன தெய்வம் குறுக்கே வந்தது போல்.

11. பசுவின் கொடை.

14. மலர்கள் இயற்கையாக கொத்தாக அமைந்திருக்கும் அமைப்பு.

15. கடவுள், ஆட்சி செய்தவன் இரண்டையும் குறிக்கும் சொல்.

16. பாஸ்டர் நகருக்குள் முதலாளி.

18. _________ காலத்தில் உதவுபவனே நண்பன்.

19. அரிதானது.

மேலிருந்து கீழ்

1. வங்கி செயல்படாத நேரத்திலும் இதைப் பயன்படுத்தி நம் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

2. பார்த்ததும்.

3. பெரும்பாலானவர்கள் சாப்பிடவும் எழுதவும் வலது கையை பயன்படுத்து கின்றனர் என்றாலும் _________ பழக்கமுள்ளவர்களும் உண்டு.

4. வீசம் என்பதைப் போல இரு மடங்கு.

9. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்வது .

10. ஆண் சிங்கத்தின் அழகுமுடி.

12. பாவம், அவனது முயற்சிகள் அனைத்தும் _________ ஆயின.

13. கர்நா டக மாநிலத்தவரின் முக்கிய மொழி.

15. அக்கால மன்னர்களின் சபையில் _________ கவிஞர் என்று ஒருவர் இருந்தார்.

17. நுணல் எனப்படுவது _________ளை.

விடைகள்

இடமிருந்து வலம்

1.ஏக்கம்

4. அலி

5.கடப்பாரை

6.எட்டடி

7.கைது

8.கார்

9.கும்பிடப்

11.பால்

14.மஞ்சரி

15.ஆண்டவன்

16.பாஸ்

18.கஷ்ட

19.அபூர்வமானது

மேலிருந்து கீழ்

1.ஏடிஎம்

2.கண்டதும்

3.இடதுகைப்

4.அரைக்கால்

9.குறிஞ்சிப்பூ

10.பிடரி

12.வீண்

13.கன்னடம்

15.ஆஸ்தான

17,தவ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us