நாணயம் வினியோகம் தி.மு.க., விருப்பம் கார்த்தி எம்.பி., பேட்டி
நாணயம் வினியோகம் தி.மு.க., விருப்பம் கார்த்தி எம்.பி., பேட்டி
ADDED : ஆக 23, 2024 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:''தி.மு.க.,வினருக்கு மறைந்த முதல்வர் கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வினியோகம் செய்வது அக்கட்சியின் விருப்பம்,'' என, சிவகங்கையில் காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நாணயத்தை தி.மு.க.,வினர், அக்கட்சி அனுதாபிகள் தான் வாங்குகின்றனர் என்றார். பிரதமர் மோடி 75 வயதிற்குள் ஓய்வு பெற வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி கூறியது குறித்த கேள்விக்கு, ''தன்வினை தன்னை சுடும்,'' என கார்த்தி பதில் அளித்தார்.
மேலும் அவர், ''தமிழகத்தை பொருத்தமட்டில் பா.ஜ., கீழே இருக்கும் கட்சி. அக்கட்சியுடன் கூட்டணி வைப்பவர்கள் கீழே தள்ளப்படுவார்கள். பா.ஜ., உடன் இல்லாவிட்டால் தான் மேலே செல்ல முடியும்,'' என்றார்.

