ADDED : மே 12, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி, புத்துார், கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரா, 70. உடல் நலக்குறைவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, 9ம் தேதி, திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற சந்திரா, சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வந்த மகன் முருகன், மருமகள் மகாலட்சுமியும், சந்திரா அணிந்து இருந்த 2 சவரன் செயின் காணாமல் போனதையும், இறந்த நோயாளியின் காதை அறுத்து, காதணியை திருட முயற்சி செய்திருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
புகாரின்படி அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.