தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ குறையுது துவரை, உளுந்து, பாசிப்பருப்பு

குறையுது துவரை, உளுந்து, பாசிப்பருப்பு

குறையுது துவரை, உளுந்து, பாசிப்பருப்பு


ADDED : மார் 31, 2024 03:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2024 03:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: -விருதுநகர் மார்கெட்டில் துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ.200 குறைந்து ரூ. 13,600, உளுந்து நாடு 100 கிலோவிற்கு ரூ.300 குறைந்து ரூ.8800, பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ.200 குறைந்து ரூ.10,500, குண்டூர் வத்தல் 100 கிலோவிற்கு ரூ.1000 குறைந்து ரூ.14,000 முதல் ரூ. 16,000க்கு விற்கப்படுகிறது.

இங்கு க.எண்ணெய் 15 கிலோ ரூ.2750, ந.எண்ணெய் 15 கிலோ ரூ.6435, பாமாலின் 15 கிலோவிற்கு ரூ.25 குறைந்து ரூ.1550, சீனி 50 கிலோ ரூ.1980, ரவை 30 கிலோ ரூ.1480, மைதா 90 கிலோ ரூ.4440, பொரிகடலை 55 கிலோ ரூ.4900, கொண்டக்கடலை 100 கிலோ ரூ. 6600 என விற்கப்படுகிறது.

தொலிபருப்பு 100 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து ரூ. 10,100, பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோ ரூ. 10,500, உளுந்து லயன் 100 கிலோ ரூ.10,000, மல்லி நாடு 40 கிலோ ரூ. 3500 முதல் ரூ.3800, மல்லி லயன் 40 கிலோ ரூ. 3450 முதல் ரூ.3600 என விற்பனை செய்யப்படுகிறது.

உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ. 200 குறைந்து ரூ. 11,800, பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ. 5500, முண்டு வத்தல் புதுசு 100 கிலோ ரூ.19,000 முதல் ரூ.21,000, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து ரூ.5300, எள் புண்ணாக்கு 50 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.2400 என விற்பனை செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us