ADDED : ஜூலை 28, 2024 10:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிரக தோஷத்தால் திருமணம் தள்ளிப் போகிறதா... சேலம் ஆத்துார் முத்துமாரியம்மனுக்கு விரலி மஞ்சளை கட்டி மாலை சாத்துங்கள்.
எட்டுத் திசைகளிலும் மாரியம்மன் கோயில்கள் சுற்றியிருக்க நடுவில் இருக்கிறாள் முத்து மாரியம்மன். இங்கு விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன. குழந்தை வரம் பெற எலுமிச்சை மாலையும், தடைகள் தீர அம்மனின் வாகனமான சிங்கத்திற்கு உப்பும், மிளகும் இடுகின்றனர். அபிேஷக தீர்த்தத்தை குடித்தால் அம்மை குணமாகும்.
வைகாசி மாத அமாவாசையில் இருந்து திருவிழா 20 நாள் நடக்கும். அப்போது தீச்சட்டி, கரகம் எடுத்தல், பொங்கல், கூழ் வார்த்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் செய்கின்றனர்.
எப்படி செல்வது
சேலத்தில் இருந்து வாழப்பாடி வழியாக 56 கி.மீ.,நேரம்
காலை 7:00 - 11:00 மணி மாலை 5:30 - 8:00 மணி
தொடர்புக்கு 98655 67457