sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் அம்மன்18 : கண்ணொளி தருபவள்

/

தினமும் அம்மன்18 : கண்ணொளி தருபவள்

தினமும் அம்மன்18 : கண்ணொளி தருபவள்

தினமும் அம்மன்18 : கண்ணொளி தருபவள்


ADDED : ஆக 03, 2024 12:04 AM

Google News

ADDED : ஆக 03, 2024 12:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி மாவட்டம் வீரபாண்டியில் கண்ணொளி தரும் கவுமாரியம்மன் இருக்கிறாள்.வனப்பகுதியான இங்கு அம்பிகை தவம் புரிந்த போது அசுரன் ஒருவன் இடையூறு செய்தான். அருகில் இருந்த புல்லை எடுத்து வீச, அது ஆயுதமாக மாறி அவனைக் கொன்றது. அப்போது வானவர்கள் மலர் துாவி வழிபட கவுமாரியம்மனாக காட்சியளித்தாள். அவள் பூஜித்த சிவன் இங்கு 'திருக்கண்ணீஸ்வரர்' என்ற பெயரில் இருக்கிறார்.

மதுரையை ஆண்ட மன்னர் வீரபாண்டியன் ஊழ்வினையால் பார்வை இழந்தார். அவரது கனவில் தோன்றி, 'வைகை கரையோரமான இங்கு இருக்கும் கவுமாரியை வழிபடச் சொன்னார். கண்ணொளி பெற்ற மன்னர் கோயில் கட்டினார். அவரின் பெயரால் வீரபாண்டி என்னும் இத்தலம் உருவானது.

அம்மை, கண் நோய் உள்ளவர்கள் தரிசித்து பலன் பெறுகின்றனர். கருப்பணசாமி இங்கு காவல் தெய்வமாக உள்ளார்.

எப்படி செல்வது

தேனியில் இருந்து 11 கி.மீ.,

நேரம் காலை 6:00 - 12:30 மணி மாலை 4:00 - 8:30 மணி

செவ்வாய், வெள்ளி, விசேஷ நாள்

காலை 6:00 - இரவு 8:30 மணி

தொடர்புக்கு

99441 16258






      Dinamalar
      Follow us