ADDED : ஆக 11, 2024 06:30 PM

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ளது விராச்சிலை. இங்குள்ள ஸ்ரீமது அடைக்கலம் காத்த அம்மனைச் சரணாகதி அடைந்தால் அதர்மம் அழியும்.
வடக்கு திசை நோக்கிய இவளை வேண்டினால் திருட்டு, துரோகம், தகராறு போன்ற பிரச்னைகள் தீரும். இங்கு வீரத்தின் அடையாளமாக முத்துக்கருப்பர் பெரிய மீசையுடன் காட்சி தருகிறார். சப்தகன்னியர், மாரியம்மன் சன்னதிகள் உள்ளன. பூப்படையாத பதினொரு வயதுக்குள் உள்ள சிறுமிகள் 15 நாள் விரதம் இருந்து இங்கு வழிபடுவது சிறப்பு. திருவிழாவின் போது ஆட்டுக்கிடா வெட்டப்படும். அன்று மாலையில் அம்மன் தேரில் புறப்படுவாள்.
மயானம் இருக்கும் திசையை நோக்கி இருப்பதால் அங்கு வரும் உயிர்களின் ஆன்மாவை அம்மன் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொள்கிறாள்.
எப்படி செல்வது
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி வழியாக 19 கி.மீ.,
நேரம் காலை 7:00 - 12:00 மணி மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு
90953 22000

