ADDED : ஜூலை 24, 2024 01:26 AM

திருஷ்டி தோஷத்தால் குழந்தைகள் அடம் பிடிக்கும். இக்குறையைப் போக்குகிறாள் திருநெல்வேலி பிட்டாபுரத்தி அம்மன்.
காளியின் அம்சம் கொண்ட இவளுக்கு புட்டு படைக்கப்படுவதால் 'பிட்டாபுரத்து அம்மன்' எனப் பெயர் பெற்றாள். இவளுக்கு மாதப்பிறப்பு, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, தை செவ்வாயன்று சிறப்பு பூஜை நடக்கிறது. அம்மனுக்கு அருகில் கிழக்கு நோக்கியபடி அகோர விநாயகர் இருக்கிறார். இவரின் கைகள், துதிக்கை துண்டித்தபடி இருப்பதால் இப்பெயர் வந்தது.
இவரின் முன் குழந்தைகளை கிடத்தி வேர் கட்டி, மை இடுகின்றனர். பிறந்த குழந்தைக்கும் வேர் கட்டலாம். இதனால் நோய்கள், சீர்தட்டுதல் மறையும். திருஷ்டி, பீடை, தீயசக்தியைப் போக்க மந்திரம் ஓதி தீர்த்தம் தெளிக்கின்றனர்.
எப்படி செல்வது
* திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 4 கி.மீ.,
* நெல்லையப்பர் கோயிலில் இருந்து 1 கி.மீ.,
நேரம் காலை 7:00 - 12:30 மணி மாலை 5:00 -- 8:30 மணி
தொடர்புக்கு 94429 30258

