ADDED : மே 27, 2024 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : தமிழகத்தின், குளிர் பிரதேசங்களில் பெய்யும் மழையால், இஞ்சி அறுவடையில் பாதிப்பு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் காய்கறி மார்க்கெட்டுகள், உழவர் சந்தைகளுக்கு தேவையான இஞ்சி ஊட்டி, பெங்களூரு, ஓசூர், மேட்டுப்பாளையம், கொடைக்கானல் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களில் இருந்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
மழை காரணமாக அறுவடையில் பாதிப்பு ஏற்பட்டு, விளை நிலங்களில் தேங்கி நிற்கும் மழை நீரால், இஞ்சியில் அழுகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. எனவே, மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும் இஞ்சி வரத்தில் சரிவு ஏற்பட்டு, விலை உயர்ந்துள்ளது.
கடந்த மே 20ல் உழவர் சந்தைகளில் இஞ்சி, கிலோ 120 ரூபாய்க்கு விற்றது. நேற்று, 180 ரூபாயாக உயர்ந்தது. வெளி மார்க்கெட்டில், கிலோ 140 ரூபாய்க்கு விற்றது, 250 ரூபாயாக உயர்ந்துள்ளது.