ADDED : ஜூன் 21, 2024 12:58 AM
சென்னை:கால்நடை மருத்துவ படிப்புக்கு, ஆன்லைனின் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்., - பி.டெக்., போன்றவற்றில், 2024 - 25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்ப வினியோகம், 3ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. இதுவரை, 13,978 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கைக்கு ஏற்ப, அவகாசம் வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர், வெளிநாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அவர்களின் நிதி ஆதரவு பெறுவோர், அயல்நாட்டிற்கான ஒதுக்கீட்டில் ஜூலை 5 வரை விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை தெரிவித்துள்ளது.
மேலும் விபரங்களுக்கு, https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

