ADDED : ஜூன் 15, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஆதார் அட்டையில் உள்ள விபரங்களை, இணையதளத்தில் இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு, செப்டம்பர் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளின்படி, ஆதார் பதிவு செய்த நாளில் இருந்து, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அடையாள சான்று மற்றும் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரி ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும். அரசு சேவை மையங்களில் புதுப்பிக்க, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஆனால், ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ள முடியும். அதற்கு செப்டம்பர், 14 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, uidai.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.