ADDED : ஆக 29, 2024 12:06 AM

சென்னை:பத்து ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில்,சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநிலத் தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். யு.ஜி.சி., ஐந்தாவது ஊதிய திருத்த அடிப்படையில், அனைத்து ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியம் திருத்தம் செய்ய வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை, விருப்ப அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஓய்வு பெற்று 70 வயதை அடைந்தவர்களுக்கு 10 சதவீதம்; 75 வயதில் 15 சதவீதம் கூடுதல் ஓய்வூதியத் தொகை வழங்க வேண்டும். மருத்துவப்படி 300 ரூபாயை, 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

