ஹிந்துக்கள் மீது தாக்குதல் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்
ஹிந்துக்கள் மீது தாக்குதல் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 12, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து, ஹிந்து முன்னணி சார்பில் இன்று மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
“அண்டை நாடான வங்க தேசத்தில், ஹிந்துக்கள் மீதும், ஹிந்து கோவில்கள் மீதும் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்தும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியும், ஹிந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது,” என, மாநில பொது செயலர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார்.

