ADDED : மார் 28, 2024 10:37 PM

மதுரை:முன்னாள் ரயில் ஓட்டுனரும், ரயில்வே ஊழியருமான ராம்குமார் கூறியதாவது:
கடந்த 2021க்கு முன் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டும் தபால் ஓட்டு வழங்கும் பழக்கம் இருந்தது. 2021ல் ரயில்வே தொழிலாளிக்கு என் முயற்சியில் தபால் ஓட்டு பெற்றுக் கொடுத்தேன்.
அதன்படி, தேர்தல் ஆணையம் ரயில்வேயில் அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் ஓட்டு வழங்க உத்தரவிட்டிருந்தது.
வரும் லோக்சபா தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் மார்ச் 19ல் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகம், கேரள ரயில்வே ஊழியர்களுக்கு தபால் ஓட்டுரிமை இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் நாளன்று பணிபுரியும் ஓட்டுனர்கள், உதவி ஓட்டுனர்கள், வண்டி மேலாளர் மற்றும் ஓடும் ரயிலை சார்ந்து பணி புரியும் அனைத்து ஊழியர்களும் தங்களது ஓட்டை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

