ADDED : ஏப் 30, 2024 10:14 PM
சென்னை:மானிய கோரிக்கையில் புதிய திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை, வேளாண் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
நடப்பாண்டு, பிப்ரவரி மாதம் வேளாண் துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, புதிய திட்டங்களுக்கு அரசு உத்தரவு வெளியிடுவது தாமதமாகி வருகிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் சட்டசபையில், துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடக்கவுள்ளது. அப்போது, பழைய திட்டங்களை துாசு தட்டாமல், விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும் வகையிலான, புதிய திட்டங்களை செயல்படுத்த, வேளாண் துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக, பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை, தமிழக வேளாண் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். நெல் உள்ளிட்ட தானியங்கள் தவிர்த்து, நீர் தேவை குறைந்த பணப் பயிர் சாகுபடி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில், அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.