ADDED : மார் 28, 2024 11:32 PM

மேட்டூர்:நாமக்கல், குமாரபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டசபரி, 38. மேட்டூர் சப் - கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர். இவரது மனைவி நர்மதா, 37, தேர்தல் துணை தாசில்தார். இந்த தம்பதி எட்டு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தனர்.
சமீப காலமாக மேட்டூர் சப் - கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்த இருவரும், மேட்டூர் மைக்கேல் தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்தனர். நர்மதாவுக்கு இருமுறை கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில், மூன்றாவதாக மகன் மவுலி ஆதித்யா, 4, உள்ளார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நர்மதாவுக்கு வேலைப்பளு அதிகரித்தது. நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, வீட்டில் மின்விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல், மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி, அலுவலர்கள் இறுதி அஞ்சலிக்குப் பின், அவரது உடல் அடக்கம் செய்வதற்கு, சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் அந்தியூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

