காரைக்கால் யார்டில் மேம்பாட்டு பணி: விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்
காரைக்கால் யார்டில் மேம்பாட்டு பணி: விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்
ADDED : ஜூன் 27, 2024 01:59 AM
சென்னை,:காரைக்கால் ரயில் யார்டில் மேம்பாட்டு பணி நடக்க உள்ளதால், சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் - காரைக்கால் பயணியர் ரயில் வரும் 28, 29, 30, ஜூலை 1, 2, 3ம் தேதிகளில் நாகூர் வரை மட்டுமே இயக்கப்படும்
திருச்சி - காரைக்கால் பயணியர் ரயில் வரும் 28, 29, 30, ஜூலை 1, 2, 3ம் தேதிகளில் நாகூர் வரை மட்டுமே இயக்கப்படும்
எர்ணாகுளம் - காரைக்கால் பயணியர் ரயில் இன்று மற்றும் ஜூலை 1ம் தேதிகளில் நாகப்பட்டினம் வரை மட்டுமே இயக்கப்படும்
எர்ணாகுளம் - காரைக்கால் ரயில் வரும் ஜூலை 2ம் தேதி நாகூர் வரை மட்டுமே இயக்கப்படும்
எழும்பூர் - காரைக்கால் ரயில் வரும் ஜூலை 2ம் தேதி நாகப்பட்டினம் வரை மட்டுமே இயக்கப்படும்
காரைக்கால் - எர்ணாகுளம் ரயில் வரும் ஜூலை 2ம் தேதி நாகப்பட்டினத்தில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.