ADDED : மே 13, 2024 07:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : கோடை விடுமுறையில் நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி, தர்ப்பணம் பூஜை செய்து அக்னி தீர்த்தத்தில் புனித நீராடினார்கள்.
பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள்.
பின் கோயிலில் சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் கடல் அழகு, புயலில் இடிந்த கட்டடங்களை கண்டு ரசித்தனர்.