'பழனிசாமிக்கு பதில் தனபால் முதல்வர் தலித் எம்.எல்.ஏ.,க்களே ஏற்கவில்லை'
'பழனிசாமிக்கு பதில் தனபால் முதல்வர் தலித் எம்.எல்.ஏ.,க்களே ஏற்கவில்லை'
ADDED : ஆக 31, 2024 02:06 AM

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சசிகலாவின் சகோதரர் திவாகரன், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுத்த பின், தினகரனுடன், பழனிசாமிக்கு மோதல் போக்கு ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண, தனபாலை முதல்வராக ஆக்கலாம் என்று கூறி, சசிகலாவிடம் முன்மொழிந் தேன். அதை, திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால், அ.தி.மு.க.,வில் இருந்த, 35 தலித் எம்.எல். ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்கள் நலத் திட்டங்களை தி.மு.க., அரசு சரியாக செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையில், கவனம் செலுத்த வேண்டும். தி.மு.க., மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதால் தான், தமிழகத்துக்கு போதுமான அளவுக்கு நிதிகள் வருவது இல்லை. இதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான்.
பழனிசாமிக்கு அட்வைஸ் செய்கின்ற அளவுக்கு, நான் பெரிய ஆள் இல்லை. அவர், என்னை விட சீனியர்; இருந்தாலும், பழனிசாமி உள்ளடக்கியே அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு நடக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தனபால், முன்னாள் சபாநாயகர்