தர்மபுரி - சவுமியா அன்புமணி கடலுார் - தங்கர்பச்சான் பா.ம.க., பட்டியல் வெளியீடு
தர்மபுரி - சவுமியா அன்புமணி கடலுார் - தங்கர்பச்சான் பா.ம.க., பட்டியல் வெளியீடு
ADDED : மார் 22, 2024 10:44 PM
சென்னை:லோக்சபா தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க.,வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றுக்கான வேட்பாளர்களை பா.ம.க., தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டார்.
வேட்பாளர்கள் விபரம்:
1. திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா, பி.காம், மாநில பொருளாளர்
2. அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு, பி.காம். பி.எல், கட்சி செய்தி தொடர்பாளர்
3. ஆரணி - அ.கணேஷ் குமார், பி.இ., பிஎச்.டி., முன்னாள் எம்.எல்.ஏ.,- திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலர்
4. கடலுார் - சினிமா இயக்குனர் தங்கர்பச்சான், டி.எப்.டெக்,
5. மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின், பி.எஸ்சி., தஞ்சை வடக்கு மாவட்ட செயலர்,
6. கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார், பி.ஏ.,பி.எல்., முன்னாள் எம்.பி., - மாநில துணைத் தலைவர்,
7. தர்மபுரி - அரசாங்கம், பி.காம்., தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலர்
8. சேலம் - ந. அண்ணாதுரை, பி.ஏ.,பி.எல்., சேலம் தெற்கு மாவட்ட செயலர்.
9. விழுப்புரம் - முரளி சங்கர், பி.காம்., மாணவரணி மாநிலச் செயலர்
அன்புமணி போட்டியில்லை
* கடந்த 2014, 2019 லோக்சபா தேர்தல்களில், தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க., தலைவர் அன்புமணி, 2014ல் வெற்றி பெற்றார். ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கும் அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை
* அரக்கோணம் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, 2019ல் விழுப்புரத்தில் போட்டியிட்ட பா.ம.க., வடிவேல் ராவணன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. யாரும் எதிர்பாராத வகையில், கடலுார் தொகுதியில் சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் களமிறக்கப்பட்டுள்ளார்.

